முத்தூமாரி அம்மன் கோவிலில் கரிநாள் உற்சவம்!
ADDED :4269 days ago
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு முத்துமாரி அம்மன் கோவிலில், புதிதாக செய்யப்பட்ட உற்சவ மூர்த்திக்கு கரிநாள் உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த திருக்காலிமேடு பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, அப்பகுதி பொதுமக்களால் புதிதாக முத்துமாரி அம்மன் உற்சவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 48 நாட்களாக மண்டல பூஜையில் இருந்த உற்சவருக்கு காலை 7:30 மணிக்கு, கரிநாள் உற்சவம் நடைபெற்றது. இதில், உற்சவர் முத்துமாரி அம்மன் தெருக்களில் வீதியுலா வந்தார். அப்பகுதி பெண்கள், அம்மனுக்கு ஆர்த்தி எடுத்து வரவெற்றனர். முன்னாதாக, கோவிலில் காலை 8:30 மணிக்கு, வேத விர்ப்பண்ணர்களால் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.