ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளி தேரோட்டம்!
ADDED :4269 days ago
ராமேஸ்வரம்: தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வெள்ளி தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரில் எழுந்தருளிய ராமர், சீதை, லட்சுமணரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.