நாங்கூரில் கருடசேவை உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் 11திவ்யதேச கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களில் இருந்து ஆண்டு தோறும் தை அம்மாவாசைக்கு மறுநாள் பெருமாள் புறப்பட்டு நாராயணபெருமாள் கோவிலில் எழுந்தருள கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு தை அம்மாவாசைக்கு மறு நாளான நேற்று இரவு க ருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் புறப்பட்டு11பெருமாளையும் கரு டசேவைக்கு அழைத்து விட்டு நேற்று காலை நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தார். மதியம் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள், ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீசெம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள், ஸ்ரீ புரு÷ஷாத்தமன், ஸ்ரீவைகுந் தநாதர், திருக்காவாளம்பாடி ஸ்ரீ கோபாலன், திருமணிகூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவ பெருமாள், திருபார்த்தம் பள்ளி ஸ்ரீ பார்த்தசார தி, அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும், தாயாருடன் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 11 பெருமாளும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள அவர்களுக் கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 2 மணிக்கு பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் கோவில் வாசலில் எழுந்தருள திருமங்கையாழ்வார் மங்க ளாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிர பக்தர்கள் 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் சேவித்தனர். பின்னர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, மாவட்ட கு ழு தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டார். சீர்காழி டிஎஸ்பி.வெ ங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மயிலா டுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.