உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில், ஆயிர வைசிய இளைஞர் சங்கத்தின் சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோபி வரவேற்றார். காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் கீர்த்திகா, தாசில்தார் விஜயா பங்கேற்றனர். பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !