உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி : திருவட்டீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில், கற்பகம்பாள் உடனுறை திருவட்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலையில், 51 கலசங்கள் வைத்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 7:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !