உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி தேரோட்டம்!

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி தேரோட்டம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் இழுத்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித்திருவிழா ஜன., 25 ல் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பூச்சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் 8 வீதிகளிலும் சப்பரம் உலா வந்து கோயிலை அடைந்தது. பத்தாம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 6:15 மணிக்கு, மகர லக்கனத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வடம் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து காலை 6:45 க்கு நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொறுப்பு ஞானசேகரன் செய்திருந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா பிப்., 6 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !