புட்லுாரில் அம்மனுக்கு சாத்திய புடவைகள் பக்தர்களுக்கு!
ADDED :4268 days ago
திருவள்ளூர்: புட்லுாரில் அம்மனுக்கு சாத்திய புடவைகள், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. திருவள்ளூர் பகுதியில் உள்ள கோவில்களில், நேற்று, சமபந்தி போஜனம் நடந்தது. அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவில் காக்களூர், வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும், சமபந்தி போஜனம் நடைபெற்றது. புட்லுாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் வனிதா, 300 பக்தர்களுக்கு, அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகளை, இலவசமாக வழங்கினார்.