உலக நன்மைக்கான ஹோமம்: ஈரோட்டில் துவக்கம்
ADDED :4267 days ago
ஈரோடு: ஈரோடு, பெருந்துறை ரோடு, பரிமளம் மஹாலில், நேற்று முதல், 15ம் தேதி வரை உலக நன்மைக்காக, லோக ஷேம மஹாசுதர்சன ஹோமம் நடக்கிறது. நேற்று காலை, 6 மணிக்கு ஸ்ரீரங்கம் பெரியகோவில், திருமலை ஜீயர் ஸ்வாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, ஹோமும் நடக்கும் இடத்துக்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். காலை, 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு ஹோமங்கள் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நான்கு முதல், 14ம் தேதி வரை காலை கோபூஜை, ஹோமம், மாலையில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. தினமும் மாலை, 5.30 மணிக்கு ஜீயர் ஸ்வாமிகள் மங்களாசாஸனம், உபன்யாஸம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை திருவாராதனம், பாராயணங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சச்சிதானந்தம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.