உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி விழாவுக்கு ஒரு கோடி சிவ நாம அர்ச்சனை

சிவராத்திரி விழாவுக்கு ஒரு கோடி சிவ நாம அர்ச்சனை

ஊட்டி : சிவராத்திரி விழாவையொட்டி, 10 ஆயிரத்து 8 தம்பதியினர், ஒரு கோடி சிவ நாம அர்ச்சனை வழிபாடு நடத்த தர்ம ரக்ஷண சமிதி ஏற்பாடுகளை செய்து வருகிறது. தர்ம ரக்ஷண சமிதியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டி தேவாங்கர் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் குமார் தலைமை வகித்தார். மண்டல அமைப்பாளர் பூவராஜன், மாவட்ட துணை தலைவர் தேவராஜன், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சுப்ரமணி முன்னிலை வகித்தனர். வரும் 27ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி, 10 ஆயிரத்து 8 தம்பதியினர் ஒரு கோடி சிவ நாம அர்ச்சனை செய்யும் சிறப்பு வழிபாடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்துவது; கிராம சமதிகளிலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பஜனை, சமயவகுப்பு, திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு நடத்துவது; நீலகிரியை மதமாற்றமில்லா மாவட்டமாக மாற்றுவது; மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து இந்து சமுதாய ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் சங்கரன், ஒன்றிய முழு நேர ஊழியர்கள் சூர்யதேவன், கிருஷ்ணன், துரை சிவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !