இரட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :4267 days ago
ஊட்டி : ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில் இன்று வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் நடக்கிறது. ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் இன்று 4ம் தேதி "ஸம்வத்ஸரா அபிஷேக விழா நடக்கிறது. இதில், மாலை 4:35 மணிக்கு உலக நன்மைக்காகவும், நீலகிரியில் இயற்கை வளம் பெருகவும், அனைவருக்கும் சுபிட்ஷம் நிலவவும் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு ஷோடச திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் மற்றும் அர்ச்சகர், பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.