உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரியூரில் புனித அருளானந்தர் தேர்பவனி!

ஓரியூரில் புனித அருளானந்தர் தேர்பவனி!

திருவாடானை: ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலய மறைசாட்சி பெருவிழா, ஜன., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, பாவசங்கீர்த்தனம், நோயாளிகள் மந்திரிப்பு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடந்தது. திண்டுக்கல்லிருந்து பாதாயாத்திரையாக கொண்டு வரப்பட்ட அருளானந்தர் தேர், ஓரியூர் புனித அருளானந்தர் தேர்பவனி நடந்தது. பாதிரியார்கள் டார்வின் எஸ்.மைக்கில், சேவியர்ராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !