உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 25ம் தேதி திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை!

25ம் தேதி திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை!

திருக்கோவிலூர்: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 13ம் ஆண்டு ஆராதனை விழா, வரும் 25ம் தேதி துவங்குகிறது. திருவண்ணாமலையில், 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கும் ஆராதனை விழாவில், முதல் நாள் நிகழ்ச்சியாக, காலை 6:00 மணிக்கு, அதிஷ்டானத்தில் ஹோமம், அபிஷேகம், அர்ச்சனையும், மாலை இசைக் கச்சேரியும் நடக்கிறது. மறுநாளான, 26ம் தேதி காலை 6:30 மணிக்கு, மகா அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனையும், 11:00 மணிக்கு, பக்தர்களின் பஜனையும், இரவு 8:15 மணிக்கு, பகவான் உற்சவ மூர்த்தியுடன், வெள்ளி ரத ஊர்வலமும் மற்றும் ஆரத்தியும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !