பரமேஸ்வரி கோவில் அம்மன் புறப்பாடு!
ADDED :4261 days ago
கும்பகோணம்: படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து நீலகண்டேஸ்வரி, பவள கண்டேஸ்வரி அம்மன் புறப்பாடு நேற்று நடைபெற்றது. இக்கோவிலில் அமைந்துள்ள படிதாண்டா பரமேஸ்வரி நீலகண்டேஸ்வரி, பவள கண்டேஸ்வரி அம்மன்களுக்கு கடந்த 28-ம் தேதி காப்புக்கட்டி கரக திருநடன உத்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து வந்த விழா நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் புறப்பாடு நேற்று நடைபெற்றது.