உலக நன்மைக்காக யாக பூஜை!
ADDED :4312 days ago
ஈரோடு: ஈரோட்டில் உலக நன்மைக்காக 108 குண்டங்களுடன் யாகபூஜை நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில் ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உலக நன்மைக்காக 108 மகா சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது.இதன் தொடக்கவிழா, சிறப்பு பூஜை நேற்று தொடங்கியது. வரும் 15ம்தேதி வரை தினமும் காலை முதல் பகல் வரை 108 யாக பூஜை நடக்கிறது.