உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்!

இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்!

மதுரை: மேலமாசிவீதியில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. சிவன் தன்னைத்தானே வணங்கும் இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருந்திருவிழா திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

விழாவிற்கான நிகழ்ச்சி நிரல்:

5.2.14 தை 23 புதன் காலை 7.1-7.13 மகர லக்னத்தில் கொடியேற்றம். பகலில் கேடயம் வாகனம் இரவில் கற்பகவிருக்ஷகம், சிம்மவாகனம்
6.2.14 தை 24 வியாழன் பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல் சுவாமி வீதி உலா வருதல்
7.2.14 தை 25 வெள்ளி பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல்
8.2.14 தை 26 சனி பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல்
9.2.14 தை 27 ஞாயிறு பகல், இரவில் கேடயம் வாகனம். சுவாமி வீதி உலா வருதல் சுவாமி வீதி உலா வருதல்
10.2.14 தை 28 திங்கள் பகலில் கேடயம் வாகனம். இரவில் ரிஷப வாகனம். இரவு 8.30-9.30 மணியளவில் கோயில் வளாகத்தில் சைவ சமய வரலாற்று கழூவேற்ற லீலை
11.2.14 தை 29 செவ்வாய் காலை 8.45 மணிக்கு பிக்ஷõடணர் புறப்பாடு. பகல், இரவில் கேடயம் வாகனம்.
12.2.14 தை 30 புதன் காலை 6.41-7.29 திருக்கல்யாணம். பகலில் கேடயம் வாகனம்.  மாலை 3.00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம். மாலை 4.00 மணிக்கு பிரதோஷம். இரவில் யானை வாகனம், புஷ்ப பல்லக்கு இரவு நான்கு மாசி வீதிகளில் உலா வருதல்
13.2.14 மாசி 1 வியாழன் காலை 8.30-9.00 மணிக்கு திருத்தேர். பகலில் கேடயம் வாகனம். இரவில் சப்தாவரணம் வாகனம் .
14.2.14 மாசி 2 வெள்ளி காலை தீர்த்தவாரி, பகலில் கேடயம் வாகனம். இரவில் ரிஷப வாகனம்.  இரவு 9.45-10.00 மணிக்கு கொடி இறக்குதல், மற்றும் மவுனபலி
15.2.14 மாசி 3 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உற்சவ சாந்தி, நண்பகல் 12.00 மணிக்கு பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !