எட்டுக்குடி முருகன் கோயிலில் தை சஷ்டி விழா
ADDED :4261 days ago
திருத்துறைப்பூண்டி: எட்டுக்குடி சுப்பிரமணி சுவாமி கோயிலில் நேற்று தை சஷ்டியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இங்குள்ள முருகன் போர்க் கோலத்தில் உள்ளதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் பாலாபிஷேகம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன், நான்கு வீதிகளையும் சுற்றி வந்தனர். தொடர்ந்து, சுப்பிரமணியருக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.