திருச்செந்தூரில் தங்க சப்பர வெள்ளோட்டம்
ADDED :4262 days ago
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களின் 7 மற்றும் 8ம் நாளில் வீதி உலா வரும் தங்க சப்பரம் பழமை அடைந்ததை அடுத்து ரூ.2 கோடி மதிப்பில் புதிய சப்பரம் செப்பணிடப்பட்டது. இந்த புதிய தங்க சப்பரத்தின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 7 மணிக்கு திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.