உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா!

விஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா!

நாகர்கோவில்: கன்னியாகுமரி சன்னதி தெருவில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விஸ்வநாதர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் மூலஸ்தான விமான கோபுரத்தில் புனித நீரால் குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி ஆகியோர் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். விழாவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் சோணாச்சலம், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க பொருளாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !