கன்னியாகுமரி சுப்பிரமணிசுவாமி கோவிலில் மாசி திருவிழா!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணிசுவாமி கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 15-ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. நேற்று காலையில் கணபதி ஹோமம், காவடி பூஜையில் வைத்தல், சிறப்பு அபிஷேகம், இரவில் திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. நாளை காலையில் சிறப்பு அபிஷேகம், இரவில் நையாண்டி மேளம், 8-ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்துவருதல்,சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பன்னீர் காவடி எடுத்தல், 9-ம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், மாலையில் காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லுதல் ஆகியவை நடைபெற உள்ளது. 15-ம் தேதி திருச்செந்தூர் சென்ற காவடி பக்தர்கள் கோவிலுக்கு திரும்பி வருதலும், பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் இடும்பன் பூஜை விழாவும், அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்கழு தலைவர் பாலுதேவர், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் பரமார்த்தலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.