உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா துவங்கியது!

விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா துவங்கியது!

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் துவங்கி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டிகாலை 8:45 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 11ம் தேதி காலை 6:00 மணிக்கு பெரிய நாயகர், பெரிய நாயகி, இளைய நாயகி, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12:15க்கு மேல் 1:30 மணிக்குள் விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

14ம் தேதி தேர்த் திருவிழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் பஞ்ச மூர்த்திகளுக்கு ரதாரோகணம் செய்து, தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

15ம் தேதி பகல் 12:00 மணிக்கு மாசிமக உற்சவம், பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா, தீர்த்தவாரி, 16ம் தேதி பகல் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு அம்மன் குளத்தில் அலங்கரித்த புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் பிரமோற்சவம் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !