திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கச் சப்பரம் வெள்ளோட்டம்!
ADDED :4262 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி, மாசி திருவிழாக்களில், ஏழாம், எட்டாம் திருவிழாக்களில் தங்க சப்பரத்தில் முருகன் வீதியுலா நடக்கும். ஒரு ஆண்டுக்கு முன், தங்க சப்பரம் புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதில் இரண்டரை கிலோ பர்மா தேக்கு மரம், ஆறு கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி, ஐம்பது கிலோ செம்பு, 50 கிலோ பித்தளை பயன்படுத்தப்பட்டது. புதிய சப்பரத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.