செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் நூற்றாண்டு விழா!
பாலக்காடு: கர்நாடக இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதர் துவக்கி வைத்த, செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் நூற்றாண்டு விழா, மார்ச் 9 தேதி முதல், 12ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. செம்பை ஏகாதசி சங்கீத நிர்வாக கமிட்டி செயலர் செம்பை சுரேஷ், கீழத்தூர் முருகன், சித்தராஜ், சாயிராம் ஆகியோர் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதர், 1914ம் ஆண்டில் துவக்கி வைத்த, செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின், 100ம் ஆண்டு விழா, மார்ச் 9 தேதி முதல் 12ம் தேதி வரை, கொண்டாடப்படுகிறது. செம்பை ஏகாதசி சங்கீத நிர்வாக கமிட்டியினருடன், பிரபல பாடகர் யேசுதாஸ் இணைந்து, கேரள மாநிலம் செம்பை கிராமத்தில், இந்த சங்கீத உற்சவத்தை நடத்துகின்றனர். இந்த ஆண்டு உற்சவத்தில், நாதஸ்வர வித்வான் திருவிழா ஜயசங்கர், உன்னிகிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன், மகதி, அபிஷேக் ரகுராம், கணேஷ் குமரேஷ், கத்ரி கோபால்நாத், மண்ணூர் ராஜகுமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திரமேனன், ராமநாதன், விஜய் யேசுதாஸ் ஆகிய, பிரபல கர்நாடக இசை கலைஞர்கள், கச்சேரி நடத்துகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.