காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சந்திரபிரபை உற்சவம்!
ADDED :4263 days ago
காஞ்சிபுரம்: ரதசப்தமியை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் கோவிலில் சந்திரபிரபை உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் நகரின் பிரதான பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ரதசப்தமியை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு, சந்திரபிரபை உற்சவம் நடந்தது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்திரபிரபை வாகனத்தில் உற்சவர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நான்கு மாடவீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது.