உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி!

மாசாணியம்மன் கோவிலில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி!

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு தினம்தோறும் ஆன்மிக இசை மற்றும் கலை விழாக்கள் நடைபெறுகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 30ம்தேதி அமாவாசை திருநாளில் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. கொலுவில் இருக்கும் அம்மனுக்கு உடுக்கை, பம்பை, உருமி மேளம், நாதஸ்வரம், தவில் இசையுடன் பஜனை கீர்த்தனைகள் நடத்துவது வழக்கம். இதையடுத்து, உலகநல வேள்விக் குழு, நாட்டுப்புற இசைக்கலைஞர் முன்னேற்றப் பேரவை மற்றும் மாசாணியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், நலிந்துவரும் இசைக்கலைஞர்களையும், மறைந்துபோன இசைக்கருவிகளையும் பாதுகாக்கவும், தினம்தோறும் மாசாணியம்மன் கோவில் ராஜ கோபுரத்திற்கு முன் மாலை 6.00 மணிமுதல் 8.00 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !