சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை!
உடுமலை: உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜப் பெருமாள் கோவிலில், உடுமலை சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில், லட்சார்ச்சனை விழா, பிப்., 4ல் துவங்கி, நேற்று நிறைவடைந்தது. கடந்த 4ம் தேதி காலை 7.00 மணிக்கு, மகா சங்கல்பம், வாசுதேவ புண்யாகம், அங்குரார்ப்பணத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது. மதியம் 12.30 மணிக்கு, தீபாராதனை நடந்தது. மாலை 5.00 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7.00 மணிக்கு, அக்கி பிரதிஷ்டை ஹோமமும் நடந்தன. பிப்., 5ம் தேதி காலை 7.00 மணிக்கு நித்ய திருவாராதனம், லட்சார்ச்சனையும், காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை, பஞ்சோபநிஷத் மூலமந்திர ஹோமமும், மதியம் 12.30 மணிக்கு, தீபாராதனையும் நடந்தன. மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு 7.30 முதல் 8.30 மணி வரை, தத்வ நியாஸ் ஹோமம், தீபாராதனை நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று, காலை 6.30 மணிக்கு, நித்ய திருவாராதனம் நடந்தது. காலை 8.00 மணிக்கு, லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.