அர்த்தநாரீஸ்வரர் படித்திருவிழாவில் பக்தர்கள் பரவசம்
ADDED :4265 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த படித்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருச்செங்கோடு மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் விழாக்குழு சார்பில், 51வது ஆண்டு படிப்பூஜை விழா நடந்தது. மலை படிக்கட்டுகளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி பூஜை நடத்தினர். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஸ்வாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பஜனை பாடல் குழுவினர் பாடல்கள் பாடி, படிக்கட்டுகள் வழியாக மலையேறி, அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமியை வழிபட்டனர்."கடந்த, 1963ம் ஆண்டு துவங்கி தொடர்ந்து நடத்தப்படும், படித்திருவிழா உலக நன்மை மற்றும் கலாச்சார சீரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடத்தப்படுகிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.