உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்!

திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று, உற்சவர் பல்லக்கு சேவையில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்றம் திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று, காலை, 9:30 மணிக்கு பல்லக்கு சேவையில் உற்சவர் முருகப் பெருமான் எழுந்தருளி மலைக்கோவிலை ஒரு முறை வலம் வந்தார். அதே போல், இரவு, 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும், உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத்தேரில்... இன்று, புலி, யானை ஆகிய வாகனங்களிலும், நாளை (12ம் தேதி) தங்கத்தேரிலும் மலைக்கோவிலில் வலம் வருகிறார். வரும், 13ம் தேதி - நள்ளிரவு முருகப் பெருமானுக்கும், வள்ளிஅம்மைக்கும் திருமணம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா, வரும், 15ம் தேதி இரவு வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !