உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

கம்பம்: கம்பம், கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், நாளை காலை நடைபெறுவதை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. கம்பம், கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம், நாளை (12.02.14) காலை 9 முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. இதற்கென கடந்த ஓராண்டிற்கும் மேலாக கோயிலில், திருப்பணிகள் நடைபெற்றது. கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர், ரூ. 60 லட்சத்தில் இந்த திருப்பணிகளை செய்து கொடுத்துள்ளார். மேலு<ம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான செலவுகளையும், முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளர். நேற்று காலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்தானிகம் ரமேஷ் என்ற ரெங்கநாத பட்டாச்சாரியார் தலைமையில், 35 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற புனித நீர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்டின் மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர், செயல்அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கென, கோயில் வளாகத்தில், பெருமாளுக்கு பிரதான 5 யாக குண்டங்கள், பரிகார தேவதைகள் 17 தெய்வங்களுக்கு 17 யாக குண்டங்கள், 17 வேதிகைகள் ஆக மொத்தம் 22 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புனித நீர் ஊர்வலத்தை தொடர்ந்து, எஜமானர் அழைப்பு, ஆச்சார்யார்கள் அழைப்பு, பகவத் பிரார்த்தனை, பகவத் அனுக்ஞை, விக்னேஷ்வர் ஆராதனை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், மிருத்சங்ராஹணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.மாலை 5 மணிக்கு ரஷா பந்தனம், கலாகாஷனம், யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பணம், பீஜாதி ஹோமம், துவார பூஜை, பாலிகை பூஜை, ராபதி மண்டல பூஜை, வேத விண்ணப்பம், நாலாயிர திவ்யபிரபந்தம், வேதம் ஆரம்பம், முதல் கால யாக சாலை தொடங்கியது. 40க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க, பூதேவி,சீதேவி சமேதராய் எழுந்தருளியுள்ள, கம்பராயப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், முறைப்படி துவங்கியது.இந்த யாகசாலை பூஜை துவக்க நிகழ்ச்சியில், ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர், அவரது துணைவியார் ரமணி, தாய் சொர்ணத்தாயம்மாள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேறறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !