உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

தேனி: தேனி பழனிசெட்டிபட்டி, ஜெய் ஆஞ்சநேயா நகரில் அமைந்துள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் நூதன அஷ்டபந்தன மஹாசம்ப்ரோஷனம் நடைபெற்றது. கண்டமனூர் ரெங்கனாதர் கோயில் அர்ச்சகர் மணி பட்டாச்சாரியார் தலைமையிலான குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.வைகை பால் ஆர்.கே.குபேந்திரன், ஆர்.கே.தாமோதரன், ஜோதி மொசைக் செல்வம், பாஸ்கரன், சீனிவாசன் ஆகியோர் கட்டுமானப்பணியில் முக்கியஸ்தர்களாக செயல்பட்டனர். கும்பாபிஷேக விழாவில் கம்மநாயுடு மகாஜன சங்க, தேனி மண்டல தலைவர் ஜெகநாதன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன்.விஷ்ணு எலக்ட்ரானிக்ஸ் வாசு, தனலட்சுமி பாட்டில்ஸ் சிவக்குமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், ஆச்சி ரியல் எஸ்டேட் சின்னன், எல்.ஐ.சி., முகவர் ராமமூர்த்தி, சுப்புராஜ், வெங்கடேஷ்வரா டிரேடர்ஸ் முரளி, தேனி மெட்ரோ ரோட்டரி சங்க பட்டய தலைவர் பார்த்திபன், கிருஷ்ணா சுவீட்ஸ் முருகன்.ரேணுகா தேவி ஏஜன்ஸீஸ் சேதுராமன், கிருஷ்ணா எலக்ட்ரிக்கல்ஸ் முருகன், வெங்கட்டராமன், கிருஷ்ணசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !