உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்ட மனு

சோளீஸ்வரர் கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்ட மனு

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், சோளீஸ்வரர் கோவிலுக்கு, ராஜ கோபுரம் கட்டு வதற்கு வருவாய் துறை அமைச்சரிடம், நேற்று, கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.கோரிக்கை கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ளது சோளீஸ்வரர் கோவில். நேற்று பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை அமைச்சர், அதன்பின், சோளீஸ்வரர் கோவிலுக்கும் வருகை தந்தார். அங்கு, அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதன் பின் கோவில் நிர்வாகத்தினர் சார்பில், சோளீஸ்வரர் கோவிலின் முன்பகுதியில் ராஜ கோபுர அமைக்க வேண்டும் என, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையெழுத்திட்ட, கோரிக்கை மனுவை வருவாய்த்துறை அமைச்சர் ரமணாவிடம் அளித்தனர். உறுதியளிப்பு மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், கோவிலுக்கு ராஜ கோபுர திருப்பணிக்குழு அமைக்குமாறும், அதன்பின் விரைவில் அரசிடம் தெரிவித்து, ராஜ கோபுர அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !