உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயின் கோவிலில் ஆதிநாத சுவாமி சிலை பிரதிஷ்டை

ஜெயின் கோவிலில் ஆதிநாத சுவாமி சிலை பிரதிஷ்டை

விழுப்புரம்: கோலியனூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் ஜெயின் கோவிலில் பிரதிஷ்டை செய்த ஆதிநாத சுவாமி சிலை நேற்று வைக்கப்பட்டது. கோலியனூர் பகுதியில் புதியதாக 1008 ஆதிநாத சுவாமி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பிரதிஷ்டை செய்த ஆதிநாத சுவாமி சிலை, 108 விஷ்வேஷ்சாகர்ஜி முனிமகராஜ், மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய சுவாமிகள், திருமலை ஜெயின் மடம் ஸ்வஸ்திஸ்ரீ தவளகீர்த்தி சுவாமிகள் முன்னிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு வைக்கபட்டது. இக்கோவிலில் வரும் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் பஞ்சகல்யாணம் (கும்பாபிஷேகம்) வைபவம் நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று, சுவாமிகளிடம் அருளாசி பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !