உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடையசுவாமி பூகுண்டம் திருவிழா

ஜடையசுவாமி பூகுண்டம் திருவிழா

கோத்தகிரி : கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் ஜடையசுவாமி கோவில் பூகுண்ட திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, 9ம் தேதி ஜக்கனாரை கிராமத்தில் மாலை 5:00 மணியளவில் அன்னதானம் நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, அதிகாலை முதல் ஐயனுக்கு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியை அடுத்து, மாலை 2:30 மணிக்கு, பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஜக்கனாரை 1000 வீடுகள் உட்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாரம்பரிய உடையணிந்து, ஐயனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !