மதுரநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4294 days ago
வடமாத்தூர்: புதுப்பாளையம், வடமாத்தூர் கிராமத்தில் மதுரநாதீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவில் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் கோபூஜை, தனபூஜை, மஹாபூர்ணாஹூதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் யாகசாலை பூஜை, நான்காம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பரிவார சகிதம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் கும்பாபிஷேம் நடைபெற்றது.