உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்மநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

ஆத்மநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகங்கை: எஸ்.வி. மங்கலம் ருத்ரகோடீஸ்வரர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. ஐந்து கோயில் நிர்வாகத்துக்குள்பட்ட ருத்ரகோடீஸ்வரர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தையொட்டி சுவாமி திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !