உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா சொன்ன மந்திரம்

அப்பா சொன்ன மந்திரம்

விஷ்ணுவின் அடியார்களில் உத்தமர் என போற்றப்படுபவர் நாரதர். மோட்சம் செல்ல நாம சங்கீர்த்தனமே (இறைவனைப் புகழ்ந்து பாடுதல்) எளியஉபாயம் என்கிறார் இவர். இவர் பிரம்மாவின் மகன். இவருக்கு, பிரம்மா கலி ஸந்தரணம் என்னும் மந்திரத்தை உபதேசித்தார். கலி ஸந்தரணம் என்றால் என்னவோ, ஏதோவென்று பயப்பட வேண்டாம். ஹரே ராம.. ஹரே ராம.. ராம..ராம.. ஹரே ஹரே!ஹரே கிருஷ்ண.. ஹரே கிருஷ்ண.. கிருஷ்ண.. கிருஷ்ண.. ஹரே ஹரே!! என்பதே அந்த மந்திரம். இதை யார்வேண்டுமானாலும், எப்போதும், எங்கேயும் சொல்லலாம். ராகமாக பாட மிக எளிமையாக இருக்கும். கலி ஸந்தரணம் என்றால், கலியுகத்தை எளிதாக தாண்ட உதவுவது என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !