மாசி பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு!
ADDED :4291 days ago
சபரிமலை: மாசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. மாத பூஜை காலங்களில், அறைகளை, ஆன் லைனில் முன்பதிவு செய்யும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜை முடிந்து, கடந்த ஜன., 20-ம் தேதி காலை, சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக, இன்று மாலை, 5:30- மணிக்கு, நடை திறக்கப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். காலை, 5:00 மணிக்கு, நடை திறந்ததும், வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகள் தொடங்குகிறது. 17-ம் தேதி இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை ஆகிய பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமனபூஜை ஆகிவையும் நடைபெறும். மாத பூஜைக்கு, ஆன் லைனில், அறை முன்பதிவு வசதி இந்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.