காரைக்கால் நித்ய கல்யாண பெருமாளுக்கு வெண்ணைத்தாழி உற்சவம்!
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில் வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. கடந்த 7ம் தேதி, கருட வாகனத்திலும், 8ம் தேதி அனுமந்த் வாகனத்திலும், 9ம் தேதி சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தேர் திருவிழாவும், வரும் 16ம் தேதி தெப்பல் திருவிழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.