திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்சவம்!
ADDED :4294 days ago
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர், சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில், பிப்.14ல் மாசித் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இக்கோயிலில் கடந்த, 5 ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்று காலை, வெண்ணெய் தாழிக்கிருஷ்ணன் திருக்கோலத்தில், பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, பகல், 11:56 மணிக்குள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு, மீண்டும் கோயிலுக்கு புறப்பாடு துவங்கும். காலை 10:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், தங்கப்பல்லக்கில் திருவீதி வலம் வந்து, தெப்ப மண்டபம் எழுந்தருளுவார். பகல், 12:50 முதல் 1:20 மணிக்குள், தெப்பம் நடைபெறும்.