காரைக்காலில் லூர்து அன்னை தேர் பவனி!
ADDED :4357 days ago
காரைக்கால்: காரைக்காலில் பிரான்ஸ் நாட்டில் லூர்து அன்னை காட்சி தந்த நாளையொட்டி தேர் பவனி நடந்தது. காரைக்கால் நிர்மலாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லூர்து அன்னை ஆலயம் சார்பில் ஆண்டுதோடும் பிரான்ஸ் நாட்டில் லூர்து அன்னை காட்சி தந்த நாளையொட்டி தேர் பவனி நடைபெறுகிறது.இத்தேர் பவனியை பங்கு தந்தை லூர்துராஜ் தொடக்கிவைத்தார்.பின் காரைக்கால் முக்கிய வீதிகள் வழியாக நேருவீதி,பாரதியார்சாலை,திருநள்ளார் சாலை, மாதாகோவில் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.தேர்பவனியில் 500க்கு மேற்பட்ட கிருஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.பின் இரவு ஆசிர்வாத வழங்கு நிகழ்ச்சி நடந்தது.