சொட்டக்கார அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4295 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டியில், சொட்டக்கார அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. வனத்துறை இடத்தில் இருப்பதால், 1967க்குப் பின், கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. சொக்கம்பட்டி, வேலாயுதம்பட்டி கிராம மக்களின் முயற்சியால், 48 ஆண்டுகளுக்குப் பின், நேற்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வலைச்சேரிபட்டி, பள்ளபட்டி, அம்மன்கோயில்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.