உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நாளை சிவராத்திரி விழா

செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நாளை சிவராத்திரி விழா

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், சிவராத்திரி விழா, நாளை துவங்குகிறது. சேலம், செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், சிவராத்திரி விழா, நாளை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நண்பர்கள் குழு சார்பில், நாளை சமாபந்தி நடக்கிறது. ஃபிப்ரவரி, 28ல் சக்தி அழைத்தலும், அம்மனுக்கு தங்கக் கவச சாத்துபடியுடன், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மார்ச், 1ம் தேதி, அம்மன் மயான சூறையாடல் நடக்கிறது. மார்ச், 7ல், அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !