கண்ணமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4286 days ago
திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் அருகே உள்ள குடிமிகுடிசை கிராமத்தில், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில், ஐந்து லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், நேற்று காலை, 10 மணிக்கு நடந்தது. இதனை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக கலச பூஜை செய்யப்பட்டு, கோவில் கோபுரத்துக்கு, வேத விற்பணர்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. வண்ணாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.