உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை தாய்மூகாம்பிகை கோவில் தேரோட்டம்

நாகை தாய்மூகாம்பிகை கோவில் தேரோட்டம்

நாகப்பட்டினம்: நாகையில், மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த, தாய் மூகாம்பிகை கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகையில், பிரசித்திப் பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசிமக பிரமோற்சவ நிகழ்ச்சி, கடந்த 9 ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக தேரோட்ட விழா நடந்தது.இதை முன்னிட்டு காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து அம்பாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !