மாம்பழத்துறை பகவதி கோயில் பிப்.,20ல் கும்பாபிஷேகம்!
ADDED :4288 days ago
ஆரியங்காவு: மாம்பழத்துறை பகவதி என்ற புஷ்கலாதேவி கோயில் கும்பாபிஷேகம் பிப்., 20 ல் நடக்கிறது. ஆரியங்காவிலிருந்து 20 கி.மீ, தொலைவிலுள்ள இக்கோயில் மாம்பழத்துறை பகவதி க்ஷ?த்ரம் என வழங்கப்படுகிறது. புஷ்கலாதேவி, ஆரியங்காவு சாஸ்தாவின் பத்தினியாக விளங்குகிறார். பத்ரகாளியின் அம்சத்தில், எட்டு கைகளில் ஆயுதம் ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கிறாள். கும்பாபிஷேகத்தை ஒட்டி பிப்., 19ல் யாகசாலை, கலசபூஜைகள் நடக்கிறது. பிப்., 20 காலை 11:40 மணிக்கு, ரிஷப லக்னத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பரிகாரபூஜை, ஹோமம், அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக கமிட்டி காரியதரிசி ராமசுப்பிரமணியன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.