பாலேஸ்வரம் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4289 days ago
சென்னை: சென்னை, பம்மலைச் சேர்ந்த ஆன்மிக குழுவினர், உத்திரமேரூர், பாலேஸ்வரம் சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். பம்மலைச் சேர்ந்த ஆன்மிக குழுவினர், 15 பேர், ஒருங்கிணைப்பாளர், சோமசுந்தரம் தலைமையில், உத்திரமேரூரை அடுத்த, பாலேஸ்வரம் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவன் மற்றும் நந்திதேவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டன. பாலேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த, 72 பெண்கள், சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். இங்கு, ஐந்து தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.