உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை!

தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை!

ராஜபாளையம்: தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு, நான்கு ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை செல்லும் சிவனடியார்களுக்கு, நேற்று, ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதி சிவனடியார்கள் சேது தலைமையில், தேவாரத்தில் பாடப்பட்டு உள்ள, 267 கோயில்களுக்கு, பாதயாத்திரை செல்கின்றனர். ராமேஸ்வரத்தில், பிப்., 2ல், யாத்திரையை துவக்கி திருச்சுழி, கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றனர். பின்னர், தென்காசி, சேத்தூர், ராஜபாளையம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில், நேற்று, ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயில் வந்தனர். அவர்களை, சேக்கிழார் மன்ற தலைவர் செண்பகம், பொருளாளர் வெங்கடாசலம், பொதுசெயலாளர் பூமிநாதன், துணைசெயலாளர் மாரியப்பன் வரவேற்றனர். செண்பகம், ""சிவனடியார்கள் 13 பேர், தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பிப்., துவங்கிய யாத்திரை, காளஹஸ்தியில் ஜூன் 29ல் முடிகிறது. மொத்தம், நான்கு ஆயிரம் கி.மீ., யாத்திரை செல்கின்றனர், என்றார். புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயிலுக்கு சென்றனர். அங்கு, பன்னிரு திருமறை மன்ற நிர்வாகி கோவிந்தராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, வேலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !