யோக ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்களுக்கு அர்ச்சனை
ADDED :4362 days ago
செங்கல்பட்டு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலில், சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், உள்ள யோக ஹயக்ரீவர் கோவிலில் கடந்த ஜன., 5ம் தேதி, வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப பூஜை நடந்தது. அதில், பங்கேற்ற மாணவர்களுக்கு, பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்காக, பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில்கள், கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.