திருப்பதி செல்ல பக்தர்கள் அச்சம்!
திருப்பூர் : தெலுங்கானா விவகாரத்தால், ஆந்திர மாநிலத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண் டுள்ளது; திருப்பதிக்கு செல்லும் எஸ்.இ.டி.சி., பஸ்களில் கூட்டம் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம், ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பிரித்து தனி தெலுங்கானா அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆந்திராவை பிரிக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த போராட்ட குழுவினர், அம்மாநிலத்தில் பல்வேறு போராட் டங்களை நடத்தினர். ஆக., - செப்., இரண்டு மாதங்கள் தமிழகத்தில் இருந்து திருப்ப திக்கு பஸ் இயக்கப்படவில்லை. திருப்பூரில் இருந்து திருப்பதி செல்லும் எஸ்.இ. டி.சி., பஸ் நிறுத்தப்பட்டதால், 46 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அக்., துவக்கத்தில் பஸ் இயங்கத் துவங்கியது. கடந்த வாரம், பாராளுமன்றத்தில் தனி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அம்மாநில காங்., எம்.பி.,கள் "பெப்பர் ஸ்பிரே தெளித்து ரகளையில் ஈடுபட்டதால், பாராளுமன்றத்தில் "சஸ்பெண்ட் செய்யப்பட் டனர். இப்பிரச்னையால், ஆந்திராவில் போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத் துள் ளன. குண்டூர், சீமாந்திரா, ராயாலசீமா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பதற்றம் தொற்றியுள்ளது. பயணிகள் குறைவு திருப்பதியில் சில இடங்களில் பதற்றம் நிலவுகிறது. இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயங்கிக் கொண்டிருக்கின் றன. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை கோட்டங்களில் இருந்து தமிழக பஸ்கள் சென்று வருகின்றன. அம்மாநில பஸ், பழனி, ஈரோடு, சேலம் பகுதிக்கு வந்து, திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றன. திருப்பூரில் இருந்து திருப்பதிக்கு வழக்கம்போல் எஸ்.இ. டி.சி., (அரசு விரைவு போக்குவரத்து கழக) பஸ் இரண்டு சென்று கொண்டிருக்கின்றன. இருப்பினும், தெலுங்கானா பதற்றம் நிலவுவதால், திருப் பதி செல்ல பயணிகள் பலர் தயங்குகின்றனர். குடும்பத்துடன் செல்ல நினைப்பவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழக்கத்தை விட குறைவான பயணிகளே செல்கின்றனர்.