உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் ஊழியர்களுக்கு மனிதநேய பயிற்சி

கோவில் ஊழியர்களுக்கு மனிதநேய பயிற்சி

திருத்தணி: முருகன் கோவில் ஊழியர்களுக்கு, மனிதநேயம் குறித்து மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மனித நேயம் குறித்து, மூன்று நாட்கள் பயிற்சி நேற்று காலை சன்னிதி தெரு வள்ளி மண்டபத்தில் துவங்கியது. கோவில் இணை ஆணையர் புகழேந்தி தலைமை வகித்தார். தக் கார் ஜெய்சங்கர் பயிற்சி வகுப்பை துவங்கி வைத்தார். இதில், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியை நிர்மலா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வரதராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், கடுமையான சொற்களால், பக்தர்களிடம் பேசக்கூடாது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதே போல், மாலை, 5:00 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில், மனித நேய பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 120க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இன்று, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்திலும், நாளை(19ம் தேதி) பெரியநாகபூண்டி நாகேஸ்வர சுவாமி கோவில் வளாகத்திலும், மனித நேய பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !