திண்டுக்கல் விஸ்வரூப ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4286 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் கோயில், விஸ்வரூப ராம பக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (பிப்.19ல்)நடக்கிறது. திருப்பணிக்குழு தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து சென்றபோது, விழுந்த சிதறல்களே சிறுமலை மற்றும் ஸ்ரீரங்கநாதபுரம். விஸ்வரூபமாக 14 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இதன் கும்பாபிஷேகம் நாளை காலை 11.30 மணிக்கு நடக்கிறது, என்றார். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் துரைச்சாமி, செயலாளர் ராமசாமி, திருப்பணிக்குழு செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் நடராஜன், டாக்டர் பெரியதம்பி, ஸ்ரீபகவான் சித்தர் அறக்கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.